முன்னாள் அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் தீர்மானம்
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். பௌஸிக்கு(A. H. M. Fowzie) எதிரான ஊழல் மோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கானது எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
அவர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பணியாற்றிய சந்தர்ப்பத்தில், நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சம்பவம் தொடர்பில் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகின்றது.
இந்நிலையில், பிரதிவாதி பௌஸி நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் சுகயீனமடைந்துள்ளதால் இன்று நீதிமன்றத்துக்கு வரவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
இதற்கமைய வழக்கு எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
