அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு (Photos)
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இன்று (02.09.2023) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஆ.சி.கணேசவேல் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்து ஆரம்பித்து வைத்த நிலையில், ஈழத்தமிழரின் சமகால அரசியல் எனும் தலைப்பில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆற்றியுள்ளார்.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.














ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
