பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயர் - திடீர் மரணத்தின் பின்னணியில் எழுந்துள்ள சந்தேகம்..
அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றையதினம்(2) சடலமாக மீட்கப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில் இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டாலும், பொலிஸார் இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து, பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவரைத் தாக்குதல் நடத்த மற்றும் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2014 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகப் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் அரசியல் தாக்கம் உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் NewsInsightTamil நிகழ்ச்சி...
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18