யாழில் முக்கியஸ்தர் வீடு ஒன்றிற்கு உதவி தேடிச் சென்ற 3 தாய்மார்களுக்கு நேர்ந்த கதி
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு வடக்கிலுள்ள முக்கிய கட்சியொன்று கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.
இதனால் இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவி அ. அமலநாயகி இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தினார்.
அதாவது குறித்த கட்சியை நேரில் சென்று அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்று முழுவதாக மறுப்பதாக அமலநாயகி குறிப்பிட்டார்.
கட்சியின் முக்கியஸ்தர் வீட்டிற்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்ற நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.மீண்டும் ஒகஸ்ட் மாதமளவில் சென்று நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த முக்கியஸ்தர் வெளியில் சென்றுள்ளார் என்ற பதிலே கிடைத்தது.
எனவே அழைப்பிதழை மட்டுமே கொடுத்து விட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 14 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam