கிளிநொச்சியில் இலங்கைக்கான கனேடிய தூதுவரை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (11.01.2024) சமத்துவக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
வாழ்வதற்குரிய முதலீடு
இதன் போது, யுத்தத்திற்கு பின்னராக காலப்பகுதியில் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்பட வேண்டிய நல்லிணக்கம் பற்றியும், முன்னாள் பேராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மீள கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், போதுமான தொழில் வாய்ப்புக்கள் இல்லாமையால் ஏராளமான இளைஞர் யுவதிகள் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்தகொண்டிருக்கின்றார்கள் எனவே அவர்கள் இங்கு தொழில்களை பெற்று வாழ்வதற்குரிய முதலீடுகளை மேற்கொண்டு தொழில் துறைகளை ஆரம்பிக்க கனடா முன்வர வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கனடா தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
