சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய சிறைக்கைதிகள் இருவர் பரீட்சையில் சித்தி
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இரண்டு கைதிகள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
வட்டரக்க மற்றும் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
மகசீன் மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் பரீட்சை நடாத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க (Santhana Ekkanayake) தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் சிறைச்சாலையில் பரீட்சைகள் நடாத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சில கைதிகள் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.