உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அரசியல் தந்திரம்: ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர்
அரசியல் ஆதாயத்திற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையின் முன்னாள் அரசாங்கம் பயங்கரவாதக் குழுவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கலாம் என்று ஓய்வு பெற்ற மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஏபிசிக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகள் நீக்கம்
இந்த தாக்குதல்களின்போது, தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீது இஸ்லாமிய அரச தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அவுஸ்திரேலியர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் குண்டுவெடிப்பு விசாரணையின் முன்னாள் தலைவராக செயற்பட்ட ரவி செனவிரட்ன, முதன்முறையாக இந்த சம்பங்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.
குண்டுத் தாக்குதல்கள் நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்ச, பதவியேற்றதும், இந்த விசாரணைகளில் இருந்து தமது தலைமையிலான குழு நீக்கப்பட்டதாக ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வந்த மாதங்களில், மேலும் 22 அதிகாரிகள் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டனர், ஆனால் அந்த இடமாற்றங்கள் எதற்கும் எனக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் ஏபிசியிடம் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சி
அத்துடன் செனவிரத்னவின் கட்டளையின் கீழ் இருந்த 700க்கும் மேற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அரசாங்கம் விதித்தது.
இந்த நடவடிக்கை, ராஜபக்ச ஆட்சியின் கூட்டாளிகளை விசாரிக்கக் கூடிய பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுவதாக ரவி செனவிரத்ன கூறியுள்ளார்.
சில புலனாய்வு அதிகாரிகள், இஸ்லாமிய குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டறிந்தபோது புலனாய்வாளர்கள், அந்த விடயங்களை தகர்த்தனர் என்று ரவி செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளுடன் தொடர்பு
இவற்றில் ஒன்று அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேஷன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது, தீவிரவாதிகளுடன் வழக்கமான தகவல்தொடர்புகளை இரகசிய இராணுவ உளவுத்துறை இயக்குனரால் பயன்படுத்தப்படும் இணைய நெறிமுறை முகவரி ஒன்றின் ஊடாக இது கண்டறியப்பட்டது.
இராணுவ புலனாய்வு அதிகாரிகளும், தாக்குதல்கள் நடந்த அன்று காலை தற்கொலை குண்டுதாரி ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
எனினும் இந்த தகவலை அவர்கள், பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் செனவிரத்ன கூறியுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்
அத்தகைய சந்தர்ப்பங்களில், சில தனிநபர்கள் மற்றும் குழுக்களை, தாம் கேள்வி கேட்க முயற்சித்தபோது, சில தடைகளை எதிர்கொண்டதாகவும் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடிந்திருக்கும் என்ற வகையிலான விசாரணைகளையும் இராணுவ புலனாய்வு முறியடித்துள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், கிழக்கு இலங்கையில் இரண்டு கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டமைக்கான, விடயங்களின் உண்மையை மறைத்த, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியமையும் இந்த விசாரணை முறியடிப்பின் ஒரு அம்சம் என்று ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
