அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரே ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக் கூற வேண்டியவர் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன என ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் விசாரணை தொடர்பாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக முன்கூட்டியே தகவல் கிடைத்தும் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்காது குறித்து நிலந்த ஜயவர்தன பொறுப்புக் கூற வேண்டும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த நிலந்த ஜயவர்தன, இந்திய புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து ஏப்ரல் நான்காம் திகதி கிடைத்த தகவல், தகவல் மாத்திரமே எனவும் புலனாய்வு தகவல் அல்ல எனக் கூறினார்.
இதன் பின்னர் பொலிஸ் மா அதிபர், சீ.என்.ஐ ஆகிய தரப்புக்கு ஏப்ரல் 7 ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார். ஏப்ரல் 9 ஆம் திகதி இது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறி சிசிர மெண்டிஸ் அறிக்கை ஒன்றுடன் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்திற்கு அமைய அன்றைய பொலிஸ் அதிபர் செயற்பட்டுள்ளதுடன் அனைத்து இடங்களுக்கு அது பற்றி அறிவித்துள்ளார்.
நான் குறுக்கு விசாரணை செய்யும் ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே இது புலனாய்வு தகவலாக மாறியது என நிலந்த ஜயவர்தன கூறினார். எப்படி அது புலனாய்வு தகவலாக மாறியது என்று நான் கேட்ட போது, ஏப்ரல் 4 ஆம் திகதி தகவல் அனுப்பியவர் ஏப்ரல் 20 ஆம் திகதி வட்ஸ் அப் தகவலை அனுப்பியதாக சொன்னார்.
அப்போது ஏப்ரல் 4 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 20 ஆம் திகதி வரையான காலத்தில் நீங்கள் உங்களது அதிகாரிகளை பயன்படுத்தி உறுதிப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்தீர்களா என கேட்டேன். இல்லை என்று பதிலளித்தார்.
ஏப்ரல் 9 ஆம் திகதி புலனாய்வு மீளாவுக் கூட்டத்தில் ஏன் தகவலை வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, சிசிர மெண்டிஸிடம் அதனை செய்யுமாறு கூறியதாக தெரிவித்தார்.
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரே புலனாய்வு மீளாய்வு கூட்டத்தில் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை ஆரம்பித்து வைப்பார். எனினும் நிலந்த ஜயவர்தன அதனை செய்யவில்லை.
தவறுதலாக இதனை தெரிவித்து, நாட்டை மூடி , ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்காவிட்டால், தனக்கு வீட்டுக்கு செல்ல நேரிட்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.
ஒரு அதிகாரியின் தவறு காரணமாக நாட்டில் சுமார் 250 பேரின் உயிர்கள் பறிப்பேயின. 500 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏப்ரல் நான்காம் திகதி கிடைத்த தகவலை புலனாய்வு தகவலாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதால், இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக அனைவரும் கூறுகின்றனர்.
இதனால், ஈஸ்டர் தாக்குதலுக்கு நிலந்த ஜயவர்தனவே முற்றாக பொறுப்புக் கூற வேண்டியவர் எனவும் மொஹான் வீரகோன் தெரிவித்துள்ளார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
