முடிவுக்கு வராத அரசியல்! தக்க தருணத்திற்காக காத்திருக்கும் கப்ரால்
எனது அரசியல் மற்றும் தொழிற்துறை வாழ்க்கை இன்னும் முடிவிற்கு வரவில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தகுந்த வாய்ப்புக்கள் கிடைத்தால் நாட்டுக்கு மீண்டும் சேவையாற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் என்னை நம்ப ஆரம்பித்தேன்..
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எவருடைய அரசியல் பயணத்திலும் வெற்றிகள் தோல்விகள் கண்டிப்பாக இருக்கும். ஏனையவர்கள் என்னை சந்தேகிக்க தொடங்கியவேளை நான் என்னை நம்ப ஆரம்பித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது என நான் கருதவில்லை.
இதன் காரணமாக பொருத்தமான தருணம் வந்தால் சேவையாற்ற தயாராகவுள்ளேன். இல்லாவிட்டால் எனக்கு ஆர்வமுள்ள பல விடயங்களில் கவனத்தை செலுத்தும் வாழ்க்கையை வாழ்வேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
