உக்ரைன் போரில் முன்னாள் பிரித்தானிய சிப்பாய் பலி - விசாரணைகள் தீவிரம்
உக்ரைனில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்த பிரித்தானியர் ஒருவர் மோட்டார் குண்டுகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வடக்கு லிங்கன்ஷையரைச் சேர்ந்த 36 வயதான ஸ்காட் சிப்லி ஏப்ரல் 22 அன்று உக்ரைனின் மைகோலேவ் பகுதியில் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளானதில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மார்பு மற்றும் வயிற்றில் "ஊடுருவக்கூடிய துண்டு காயங்களால்" இறந்தார் என்று ஆக்ஸ்போர்ட்ஷையர் கரோனர்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய இராணுவத்திலிருந்து விலகிய சிப்லி, மார்ச் மாதம் உக்ரைனுக்குப் பயணம் செய்தார். படையெடுப்பு தொடங்கியதிலிருந்து மோதலில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் பிரித்தானிய பிரஜை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நவம்பர் 15ஆம் திகதி முழு விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் பிரித்தானியாவின் முன்னாள் படை வீரர் பலி
உக்ரைன் ஆயுதப் படைகளுக்காகப் போரிட்ட முன்னாள் பிரித்தானிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மார்ச் மாதம் பிரிட்டிஷ் இராணுவத்தை விட்டு வெளியேறி உக்ரைனுக்குப் பயணம் செய்த ஜோர்டான் கேட்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அண்மைய நாட்களில் தீவிரமான சண்டையைக் கண்ட கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்க் நகரத்துக்கான போரில் அவர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவிற்கு எதிராக போரிடும் 3,000 பிரித்தானியர்கள்
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் தரப்பில் சுமார் 3,000 பிரித்தானிய தன்னார்வலர்கள் தற்போது போராடி வருவதாக ஜார்ஜிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் தற்போது 20,000 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதன்படி, உக்ரேனிய கட்டளையின் கீழ் உள்ள மற்றொரு இராணுவப் பிரிவானது பெரும்பாலும் வெளிநாட்டினரை உள்ளடக்கியது.
இதன்படி, தற்போது உக்ரைன் தரப்பில் சுமார் 3,000 பிரித்தானிய தன்னார்வலர்கள் போராடி வருவதாக ஜார்ஜிய தளபதி தெரிவித்துள்ளார்.