துறைமுக நகருக்கு விஜயம் செய்த பிரித்தானிய முன்னாள் பிரதமர்
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கொழும்பு துறைமுக நகருக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்கால முதலீட்டாளர்களை கொழும்பு துறைமுக நகருக்கு ஈர்ப்பது அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட வந்த முதல் வெளிநாட்டு ராஜதந்திரி டேவிட் கெமரூன் ஆவார்.
பிரித்தானிய முன்னாள் பிரதமர், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிஹிலர், சட்டம் மற்றும் நிறுவனங்கள் விவகார பணிப்பாளர் விந்திய வீரசேகர, கொழும்பு துறைமுக நகர தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யங்க் லுயன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் ரேணுகா வீரகோனும் கலந்துக்கொண்டுள்ளார்.