ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளர் காலமானார்
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முறைசாரா கல்விப்பிரிவின் முன்னாள் பிரதி பணிப்பாளருமான த.மாசிலாமணி காலமானார்.
சுகவீனம் காரணமாக இன்று காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் ஆசிரியராகவும் வேறு பாடசாலைகளில் அதிபராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றிய அவர், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முறைசாரா கல்விப்பிரிவின் உருவாக்கத்தின் காரணகர்த்தாவாகவும் இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டியவர்.
அரசியல் நீரோட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலில் இணைந்த அவர் 2012ஆம்
ஆண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்
தெரிவுசெய்யப்பட்டு அரசியல் மூலம் தனது சேவையாற்றியவர்.
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam