போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ அதிகாரி கைது
பதுளை - பண்டாரவளை நகரில் வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்களை கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில் தங்கியுள்ள வெலிமடை அம்பகஸ்தோவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவல்
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பண்டாரவளை நகரிலுள்ள இந்த வாடகை வீட்டில், பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், சந்தேக நபர் ஹெரோயினை சிறிய பக்கட்களில் பொதி செய்து கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும், அதன் போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், வெளிநாட்டில் உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் மூலம் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri