வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஒரு பகுதியை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போதே குறித்த விடயத்திற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேலைத்திட்டம்
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில் முப்படைகளின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |