வடக்கு அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக உள்ள வனவளத் திணைக்களம்
வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, கோரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025) நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் இது தொடர்பில் கோருவது தொடர்பில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப்போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார்.
[YUMJT8W ]
உயர்மட்ட குழு கலந்துரையாடல்
கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில், அவர் இந்த விடயத்தை விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்பாசன அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதற்கு அமைவாக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுக் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவற்றால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரவைகள், குளங்கள், வயல்கள், மக்கள் மீள்குடியமர்வுக்கான காணிகள் என்பன எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக விவரங்களை தயாரிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதன்போது அரச காணிகள் மாத்திரமே, ஒதுக்கக் காணிகளாக அரச திணைக்களங்களால் அறிவிக்க முடியும் எனவும் தனியார் காணி எனின் அதனைச் சுவீகரித்தே ஒதுக்க காணிகளாக அறிவிக்க முடியும் என்றும சட்ட ஏற்பாடு உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன அதனைப் பின்பற்றாமல் வர்த்தமானியை வெளியிட்டுள்ளன என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 3 நாட்கள் முன்

திருப்பியடிக்கும் கனேடிய மக்கள்... ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு News Lankasri
