ஹிசாலினியின் மரணம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய தடயம்!வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தின் பணியாற்றி வந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் தடயமொன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
அதற்கமைய, இன்று பொலிஸ் குழுவொன்று மாலபே பிரதேசத்துக்கு சென்று அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் இதுவரையில் சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண்ணையும்,ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ரிஷாட்டின் இல்லத்தில் பணியாளராக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
NEW நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்: பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam