யாழில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள தடயவியல் பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடைகளை கொண்ட கடைத்தொகுதிக்கு இன்றையதினம்(14.01.2026) அதிகாலை வேளை தீ வைக்கப்பட்டுள்ளது.
கதவுக்கு தீ மூட்டி விட்டு
இரு நபர்கள் கதவுக்கு தீ மூட்டி விட்டு தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால் பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை.
குறித்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த் என்பவர் கட்சி அலுவலகத்தை நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri