யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமடையும் காற்றின் தரம்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரமானது மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இன்று (18) காலை 7.30 அளவில் வெளியிடப்பட்ட காற்று தரச் சுட்டெண் (AQI) தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள்
அதன்படி, காற்று தரச் சுட்டெண் அளவு யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான 186 ஆக பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் 170 ஆகவும், சிலாபத்தில் 164 ஆகவும், அனுராதபுரத்தில் 165 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து கிளிநொச்சியில் 170 ஆகவும், பத்தரமுல்லையில் 166 ஆகவும், திருகோணமலையில் 156 ஆகவும், அக்கரைப்பற்றில் 154 ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்த பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனிடையே, எல்ல பகுதியில் காற்று தரச் சுட்டெண் அளவு 101 ஆகப் பதிவாகி சற்று ஆரோக்கியமற்ற வகையிலும், இரத்தினபுரி பகுதியில் 96 என மிதமான காற்றுத் தர நிலையிலும் பதிவாகியுள்ளன.

குறிப்பாக காற்று மாசு அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சாத்தியமான சுகாதார தாக்கங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.