திருகோணமலையில் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி 44 பேருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களில் ஒருவரே இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கல் மார்சல் என்ற 57வயதுடையவராவார்.
மேலதிக விசாரணை
மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்தத அவர் நேற்றிரவு (24) திருகோணமலை அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது சுகவீனமுற்றதாகவும் இதனை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் முன்னெடுத்து வந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |