போலி ஆவணங்களுடன் இலங்கையில் இறங்கிய வெளிநாட்டவர் நாடு கடத்தல்
போலியான பிரேசிலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இன்று (23) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள் அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்து, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செனகல் நாட்டை சேர்ந்த 35 வயதான சந்தேகநபர் இன்று காலை 05.45 மணிக்கு இலங்கை எயார்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
தொழில்நுட்ப சோதனை
இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் அடைந்து, ஆவணங்களுடன் அவரை எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைத்துள்ளனர்.
இதன்பின்னர் அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளில் பிரேசிலிய கடவுச்சீட்டு போலியானது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரது பொதிகளை ஆய்வு செய்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது உண்மையான செனகல் கடவுச்சீட்டையும், நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கமைய, அவர் வந்த வழியே கத்தாரின் தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக இலங்கை விமான நிறுவன அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யாரு பாருங்க Cineulagam

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
