இலங்கை வந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்
சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜெஸ்பர்சன் டோசன் என்ற 68 வயதான சுற்றுலா பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நல்ல தண்ணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இ.ஏ.பி.எஸ் வீரசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவல்கள்
தனது மனைவியுடன் நேற்றைய தினம் குறித்த நபர் நல்ல தண்ணி பகுதிக்குச் சென்று சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கி இருந்தார் எனவும் இன்று அதிகாலை சிவனொளிபாத மலைக்கு சென்றபோது திடீரென நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த வெளிநாட்டுப் பிரஜையின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை இலங்கை வந்ததன் பின்னர் சிகிரிய பிரதேசத்தில் வைத்து நோயின் நிலைமைக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் சடலம் உயிரிழந்தவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.