கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் ஒரு வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பணிபுரியும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் இன்று (10) காலை ரூ.55,29,000 மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதிகளில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டுகள்
இலங்கையில் பணிபுரியும் பொறியியலாளரான 45 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று அதிகாலை 04.24 மணிக்கு ஏர் அரேபியா விமானம் G.- 9502 மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
ஈரானில் உள்நாட்டு பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட 36,860 "பஹ்மான்" சிகரெட்டுகளை இரண்டு பொதிகளில் மறைத்து வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.