கட்டுநாயக்க விமான நிலையத்தில் 19 வயதுடைய இளைஞன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
600,000 ரூபாய் மதிப்புள்ள அலங்கார செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த பயணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய விமானப் பயணி இன்று காலை சுங்க பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இளைஞன் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
பிரிலோடென்ட்ரம், அக்லோனெமா, அலோகாசியா மற்றும் மொன்ஸ்டேரா வகைகளைச் சேர்ந்த 386 அலங்கார செடிகள் அவர் கொண்டு வந்த 03 சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan