கனடாவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள்
கனடாவை தளமாகக் கொண்ட மாசு கட்டுப்பாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அதன் ஏழு ஊழியர்களின் பணி அனுமதிகள் காலாவதியாகவுள்ளதால், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (TFW) திட்டத்தின் புதிய விதிமுறைகளை தளர்த்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.
நவம்பர் 2024 இல் அமல்படுத்தப்பட்ட புதிய குடியேற்ற விதிமுறைகளின் கீழ், கனேடிய நிறுவனங்களில் பணிபுரியும் இன்னும் பல திறமையான தொழிலாளர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker - TFW) திட்டத்தில் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களால் பல திறமையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்போது நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
34,000 வேலை வாய்ப்பு
குறிப்பாக, உயர் சம்பள வேலை வாய்ப்புகளுக்கான சம்பளம் அளவுகோல்கள், சராசரி சம்பளத்தைவிட 20% அதிகமாக்கப்பட்டுள்ளது, இது மாகாணம் அல்லது பிரதேசத்தைப் பொறுத்து மணிக்கு 5 டொலர் முதல் 8 டொலர் வரை அதிகரித்துள்ளது.
மேலும், 2024 செப்டம்பர் 26 முதல், ஒரு நிறுவனத்தில் TFW திட்டம் வாயிலாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மொத்த ஊழியர்களில் 10 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் சுமார் 34,000 வேலை வாய்ப்புகளை உயர் சம்பளப் பிரிவிலிருந்து குறைந்த சம்பளப் பிரிவுக்கு மாற்றக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
தனால் நிறுவனங்கள் கூடுதல் சம்பள ம் வழங்க முடியாமல், தங்களின் திறமையான ஊழியர்களை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
