வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது
போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நுவரெலியா (Nuwara Eliya ) - டொபாஸ் பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வேனின் சாரதி கைது
நுவரெலியா (Nuwara Eliya) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, 19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா (Nuwara Eliya) பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
