காணாமல் போன வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு
கடுகண்ணாவ -அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது காணாமல் போனதாக கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலம் இன்று (14.07.2023) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (10.07.2023) நடைபயணம் சென்ற போது பெண் காணாமல் போனதை அடுத்து, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்று (13.07.2023) தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெண்ணின் சடலம் மீட்பு
ஜூன் 26 அன்று நாட்டிற்கு வந்த பெண் தனியாக சுற்றுப்பயணம் செய்து
கொண்டிருந்தார்.
அவர் ஜூலை 10 அன்று கண்டி பேக் பேக்கர்ஸ் விடுதிக்கு சென்றிருந்தார், இதன் பின்னர் அங்கிருந்து சென்ற அவர் இரவில் விடுதிக்கு திரும்பாததால் விடுதி நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
