வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவிப்பு
மின்னணு ஆவண சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்டுள்ள எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவண சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார, அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த தற்காலிக இடைநிறுத்தமானது, பத்தரமுல்லையிலுள்ள தூதரக விவகாரப் பிரிவின் முதன்மை அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை, குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அனைத்து பிராந்திய தூதரக அலுவலகங்களின் சேவைகளையும் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ள 'e-DAS' அமைப்பை வழமைக்குக் கொண்டுவந்து, சான்றளிப்புச் சேவைகளை விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதற்காக, சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் மற்றும் ஏனைய தரப்பினருடன் இணைந்து அவசர நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்
விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் ஆன்லைன் (Online) மூலம் ஏற்கனவே நேர ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள், அடுத்தகட்ட அறிவிப்புகள் மற்றும் இற்றைப்படுத்தல்களை (Updates) அறிந்துகொள்ள e-Channeling நேர ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து அவதானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டவுடன், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அது குறித்துத் தனியாக அறிவிக்கப்படும் என தூதரக விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு தூதரக விவகாரப் பிரிவு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam