இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா சாம்பல்தீவு களப்பு பிரதேசத்திற்கு விஜயம்

People Trincomalee Fisherman
By Independent Writer Sep 17, 2021 07:01 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

இலங்கையின் கரையோர வள பாதுகாப்பு தாழ் நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா திருகோணமலை - சாம்பல்தீவு களப்பு பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் காணி அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக அப்பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பிரதேசத்திற்கான கள விஜயத்தை அவர் நேற்று மேற்கொண்டுள்ளார்.

களப்பு பிரதேசம் மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தல் உட்பட மீனவ குடும்பங்களை வாழ்வாதாரம் மேம்பட பாரிய பங்களிப்பைக் களப்புக்கள் வழங்குகின்றன.

சாம்பல்தீவு களப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் உடனடியாக உரிய நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சாம்பல்தீவு பிரதேசம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கை ஒன்றை தமக்கு வழங்குமாறும் இதன்போது அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

அத்துடன், சுற்றாடலுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதன்போது சாம்பல்தீவு களப்பு பிரதேசத்தில் அமைச்சர் தலைமையிலான அதிகாரிகளால் கண்டல் தாவரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரள, கரையோரம் பேணல் கரையோர மூல வள பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அமைச்சரது பணி குழாத்தினர், உரிய அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US