இலங்கை விஜயம் மேற்கொள்ளும் ஈரானின் வெளிவிவகார அமைச்சர்
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹெய்ன் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகெவ் கொழும்புக்கு விஜயம் செய்த சில நாட்களிலே ஆகியுள்ள நிலையிலேயே அவர் நாளைய தினம் (19.02.2024) வருகை தரவுள்ளார்.
குறித்த இரண்டு நாள் விஜயத்தை முன்னிட்டு ஈரானிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் முறையான அழைப்பின் பேரில் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு இது ஒரு "நல்லெண்ண" விஜயம் என குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தெஹரானுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரில் அமீர் அப்துல்லாஹெய்ன் இலங்கை வருகை தரவுள்ளார்.
விஷேட சந்திப்பு
இதன்போது அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோருடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், ரானிய ஆதரவு ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா படைகள் காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலிய படைகளுடன் ஈடுபட்டுள்ளன.
அதே நேரத்தில் யெமனின் ஈரானிய ஆதரவு ஹவுதி குழு செங்கடலில் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களைத் தாக்கி, காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்தநிலையில் செங்கடலில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை இலங்கை எதிர்க்கிறது.
அமெரிக்க ரோந்துப் படையினருடன் இணைதல்
அத்துடன், செங்கடலில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான ரோந்துப் படையினருடன் இணைய போவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் கடற்படைக் கப்பலை செங்கடலுக்கு அனுப்பவில்லை.
இந்த சூழ்நிலையிலேயே ஈரானிய வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் இடம்பெறவிருக்கின்றது.
மேலும் அவர், ஜனாதிபதியுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலில் காசாவில் நிலவும் மோதல்கள் தொடர்பான விடயங்கள் உள்ளடங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |