கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சரால் பிரச்சினை இல்லை! நாடாளுமன்ற படைகள சேவிதர்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த 5ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமானது.
தாம் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர தனக்கு அறிவித்ததன் பின்னர், நாடாளுமன்றத்திலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களை ஆராய்ந்ததில் அவர் நாடாளுமன்றத்துக்குக் கடந்த சில தினங்களில் வருகை தரவில்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நடத்திச் செல்வதில்எந்தவித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
