விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சரின் மகன் விவகாரம்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் 19 வயது மகன் பிலால், அமெரிக்காவில் கல்லூரி மாணவராக இருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை அரசாங்க தூதுக்குழுவில் பங்கேற்றமை தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அவர் தமது பணிகளுக்கு தன்னார்வ அடிப்படையில் உதவி வருவதாக முன்னதாக அமைச்சர் சப்ரி விளக்கமளித்திருந்தார்.
எனினும் பொதுமக்கள் அனுமதிக்கப்படாத ஐக்கிய நாடுகளின் அமர்வுகளில் 19 வயதான பிலால் பங்கேற்பதற்கு, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி அலுவலகம் அனுமதியை பெற்றுக்கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பி உள்ளது.
வெளியான புகைப்படங்கள்
இந்தநிலையில் அவர், சப்ரியுடன் ருமேனியா நாட்டு வெளியுறவு அமைச்சரின் சந்திப்பில் பங்கேற்றமையை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட இந்த புகைப்படத்தின் படி, இது ருமேனிய அமைச்சர்
லுமினிடாவுடன் அவரது குறிப்பு எடுப்பவர் மற்றும் மற்றொரு அதிகாரி ஆகியோர்
பங்கேற்றுள்ளனர்.
சப்ரியின் தரப்பில் குறிப்பு எடுப்பவர் எவரும் இல்லாதநிலையில், அனைத்து நெறிமுறைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவரது மகன் பிலாலும் மற்றொருவரும் அமர்ந்திருந்தனர் என்பதை ஆங்கில செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |