நாத்தாண்டியவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டு மீட்பு
நாத்தாண்டிய பிரதேசத்தில் வெளிநாட்டுத் தயாரிப்பான கைக்குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
நாத்தாண்டிய, துங்கன்னாவ பக்மீகஸ்வெவ பகுதியில் வெடிக்காத மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் குறித்த வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மராவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (25) காலை சுமார் 10.00 மணியளவில் அந்த கைக்குண்டைக் கண்ட அந்தப் பகுதிவாசி ஒருவர் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
கைக்குண்டு மீட்பு
நாத்தாண்டிய-குளியாபிட்டிய பிரதான சாலையை ஒட்டிய ஒரு பக்கச்சாலையின் அருகே அந்தக் கைக்குண்டு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக அந்தப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சில காலத்திற்கு முன்பு நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த அந்தக் குண்டு மேற்பரப்பிற்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.