நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை
நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்றைய தினம்(13.07.2023) இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த சில தசாப்தங்களாக ஏனைய பகுதிகளை விடவும் வடபகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன. இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை இந்த மாகாணங்களுக்கு கொண்டு வந்தது.
புகையிரத கடவைக்கு எடுத்துரைப்பு
யாழ்ப்பாணத்துக்கான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தனவிடம் புகையிரத கடவை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.
கத்தானை புளியடி சந்தியில் புகையிரத கடவை அமைக்குமாறு சாவகச்சேரி சங்கத்தானை மக்கள் நீண்டகாலமாக பல தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சாவகச்சேரி சங்கத்தானை புளியடி சந்தியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர்,
பாதுகாப்புக்கடவை காவலாளி பணிக்கு தற்போதைய நிலையில் புதிதாக நியமனம் செய்யமுடியாததால் சாவகச்சேரி நகர சபையூடாக ஒருவரை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சாவகச்சேரி நகரசபையோடு குறித்த விடயம் தொடர்பாக வரும் வாரமளவில் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
கடன் மறுசீரமைப்பு பணி
இந்த கடன் மூலம் அனைத்து பாதைகளும் புடரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த தொடருந்து வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன.
மின்சார விநியோகம், தொலைதொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டுவரப்பட்டன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோவிட் பரவல், அரசியல் மற்றும் பொருளாதார
காரணிகளால் தற்போது வெளிநாட்டு கடனுக்கான தவணையை செலுத்த முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
இதனால், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான நிதி இல்லை. ஜனாதிபதி, மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நிதி நிபுணர்கள் இணைந்து கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும்.
நல்லூர் ஆலய திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்களின் நலன்கருதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக பதுளை ஓடிசி, சீதாவாகை ஓ டி சி போன்று யாழ்ப்பாணம் ஓடிசி தொடருந்து சேவை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |