வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி - 4 வயது சிறுவன் பலி
வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் குவைத் நாட்டைச் சேர்ந்த அம்மார் எனப்படும் நான்கு வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.
சிறுவனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் அவர்கள் குவைத்தில் வசித்து வந்துள்ளனர்.
திருமண நிகழ்வு
இந்த நிலையில் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கை வந்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் மீண்டும் குவைத் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இதன் போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன், வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றிற்குச் சென்று பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் சிறிய வலையின் உதவியுடன் மீன்பிடிக்க முயன்றுள்ளார்.
இதன்போது அவர் தவறுதலாக ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் எனப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சிறுவன் பலி
சிறுவன் வீட்டில் இல்லாததால் பதற்றமடைந்த உறவினர்களும் அயலவர்களும் சுற்றுப்புறத்தைத் தேடியபோது, சிறுவனின் சடலம் ஆற்றில் மிதப்பதாக தெரியவந்துள்ளது.

உடனடியாக சிறுவனை வெலிகம மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சடலம் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.