புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சலுகைகள்
மக்கள் எப்போதும் தங்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முதலில் நாம் எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் நாட்டை வேண்டுமென்றே சிரமங்களுக்குள்ளாக்குவதற்காக செய்யப்பட்ட வெறும் அரசியல் பேச்சுகளுக்கு செவிசாய்க்காமல் நாட்டின் அவசரத் தேவையை உணர்ந்தார்கள்.
இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளனர்
எனவே,அவர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளனர். உண்மையில் இதற்குக் காரணம் நமது அசாத்திய திறமையல்ல.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்கள் நாட்டைப் பற்றி நினைக்கும் போது அவர்களுக்குப் பெருமை சேர வேண்டும். நாங்கள் அவர்களிடம் பணத்தை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தோம், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
அரசாங்கம் என்ற வகையில் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்தோம். எப்படியோ, நாட்டின் சார்பாக அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்.
மக்கள் மனதில் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை புகுத்த சில பிரிவினர் முயற்சித்தாலும், மக்களை மாற்றும் சக்தி அவர்களிடம் இல்லை என்பது மிகவும் வெளிப்படையானது. மக்கள் எப்போதும் தங்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.