இலங்கையில் அதிகரித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏழு மாதங்களில் 567 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், வேலை தேடுபவர்களை ஏமாற்றிய நபர்களிடமிருந்து ரூ. 199.4 மில்லியனுக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட, உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனமொன்று உள்ளடங்களாக ஐந்து நிறுவனங்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு சோதனைகளை மேற்கொண்டது.
மோசடி வழக்குகள்
அதன்போது, உரிமம் பெற்ற நிறுவனங்களில் இருந்த ஏழு பேர் உட்பட மொத்தமாக 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனவே, எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை பணியகம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற முயன்றபோதே அதிக மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 1989 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொண்டு வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்க முடியும் என்பதுடன் மோசடி செய்யப்பட்ட எவரும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடளிக்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri

அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
