மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருடன் சட்டப் போர்க்கு தயார் - சாகர காரியவசம்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுடன் சட்டப் போர் ஒன்றுக்கு தயார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி வெளிநாட்டு நாணயக் கணக்கை வெளிநாடு ஒன்றில் பராமரித்து வருகிறது என கூறியமைக்காக, காரியவசத்திற்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்ததாக அனுரகுமார திசாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.
காரியவசத்தின் பதில்
இதற்கு பதிலளித்த காரியவசம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கு எதிராக தாம் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த காலங்களில் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு எதிராக திசாநாயக்கவின் பொய்யான பேச்சுக்கள் தொடர்பில் நீதிமன்றில் எழுப்பப்பட வேண்டிய பல கேள்விகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri