வெளிநாட்டுத் தூதுவர்கள் மலைநாட்டில்: நட்பு ரீதியாக சுற்றுப்பயணம் (Photos)
இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் மத்திய மலைநாட்டுக்கு நட்பு ரீதியான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றின் ஏற்பாட்டிலேயே இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கின்றது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம்
இந்தப் பயணம், ஜூலை 01 முதல் 03ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (06.07.2023) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் தூதுவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்த விசேட சுற்றுப் பயணத்துக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.