லீசிங் நிலுவைக்காக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கல்
லீசிங் நிலுவைத் தொகை காரணமாக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கலான நிலை உருவாகியுள்ளது.
அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சரின் பணிப்புரை
கடந்த நாட்களில் அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் போது குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த பலர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்ததாக தெரியவருகிறது.
அவ்வாறான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை சம்பாதித்திருந்த நிலையில் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
