கொழும்பில் வலுக்கட்டாயமாக வீடு ஆக்கிரமிப்பு? சஜித்தின் மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச (Jalani Premadasa) தனது வீட்டை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு 7 இல் உள்ள கறுவாத்தோட்டம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2007ம் ஆண்டு முதல் இந்த வீட்டை ஜலனி பிரேமதாச வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வந்தாலும், தற்போது அவருக்கு சுமார் 3.5 மில்லியன் ரூபா கடன்பட்டுள்ளதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தொடர்ந்து வாடகை செலுத்த தவறி வருவதாகவும் குறித்த நபர் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது வீட்டை காலி செய்ய வேண்டும் அல்லது வீட்டை அதன் தற்போதைய மதிப்புக்கு விற்க விரும்புவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.