வடமராட்சியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மறியல்!
யாழ்., வடமராட்சி - முள்ளிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுடன் காணொளித் தொடர்புத் தொழில்நுட்பம் மூலம் விசாரணை மேற்கொண்ட பதில் நீதிவான், இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இருவரும் சட்டவிரோத மண் கடத்தல்காரர்கள் என்றும், பொலிஸாரின் உத்தரவை மீறிச்
செயற்பட்டதால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகினார்கள் என்றும், அவர்கள்
பயணித்த மண் கடத்தல் வாகனம் அவர்களின் சொந்த இடமான துன்னாலையில் வைத்து
கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
