முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மர்மமான மரணம்! சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்
காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த 17 ஆம் திகதி காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
பிரேத பரிசோதனை
அவரது மரணம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சி.டி.விக்ரமரத்னவின் சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன உயிரிழக்கும் போது 63 வயதாகும்.
1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு
அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, சி.டி. விக்ரமரத்ன மேலும் சுமார் 8 மாதங்கள் பொலிஸ் மா அதிபர் பதவியில் பணியாற்றினார்.
எனினும் அவர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 9 நிமிடங்கள் முன்
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri