தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை: ரணிலிடம் பாலித தெரிவிப்பு
இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் புலம்பெயர் தமிழர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்குத் தேவையான ஒழுங்குகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஜனாதிபதியிடம் கருத்துரைத்தபோது, புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றனர். இது தொடர்பில் எம்முடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினர்.

தற்போது நம்பிக்கை இல்லை
குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நெருக்கடியான இந்த நிலையில், இலங்கைக்கு உதவுவதற்கும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாகவுள்ளனர்.
சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.
இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர்.

தேசிய அரசியல் நகர்வுகள்
எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடக்குக்கு மீண்டும் செல்லவுள்ளேன். எனவே, இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்றிணைத்துப் பயணிப்பது சிறந்தது என்று நீண்ட விளக்கத்தை எடுத்துரைத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்து ஜனாதிபதி ரணில் கூறுகையில், புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழையுங்கள்.
அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குங்கள். அரசியலில் ஈடுபடும்போது, உலக அரசியல் போக்கைப் போன்று தேசிய அரசியல் நகர்வுகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யுங்கள். இது அனைவருக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 13 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam