நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆபத்தான பயணம்! பசறை - கோணக்கலை மக்களின் அவலம்
பதுளை - பசறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோணக்கலை லோவர் பிரிவு, வீரன்புர கிராமத்திற்கு செல்கின்ற நடைபாதை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றைக்கடந்து செல்லும் ஆபத்துமிக்க இப்பாதையூடாக கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்கின்ற நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்களும், தோட்டத்தொழிலாளர்களும், பொதுமக்களும் பயணிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் தவிர்க்கமுடியாத நடைவழிப் பாதையாக காணப்படும் இந்தப் பாதை, மண்சரிவு காரணமாக சேதமடைந்து சுமார் ஐந்தாண்டுகளுக்கு அதிகமாக புனரமைக்கப்படாமல் உள்ளது.
விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
இதனால் இப்பாதையை புனரமைத்து ஐம்பது மீற்றர் அளவுள்ள சிறிய பாலம் ஒன்றை அமைத்து நடைப்பாதையைப் புனரமைத்து தருமாறு பாடசாலை மாணவர்களும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |