பாஸ்கரன் கந்தையா பங்கேற்பில் கோலாகலமாக நிறைவடைந்த கால்பந்தாட்ட போட்டி
1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி” கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
இந்த போட்டிகள் நேற்று(31.08.2026) தட்சனாமருதமடு ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மன்னாரில் இடம்பெற்ற கால்பந்தாட்டம்
இதற்கமைய, இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில், கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.
இந்த கால்பந்தாட்டப் போட்டி நேற்று(31.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


வெளிநாட்டில் ஆடம்பர விடுதியில் பதுங்கியிருந்து நாட்டை உலுக்கிய பிரபல குற்றவாளி! அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு