திடீரென இடிந்துவீழ்ந்த கொழும்பு நீதிமன்ற கட்டடத்தின் பகுதி! வழக்கு விசாரணகள் ஒத்திவைப்பு
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.
தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
மேலும், இன்று(31) நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் கட்டமைப்பில் மேலும் உறுதியற்ற தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதால், யாரும் கட்டடத்திற்குள் நுழையக்கூடாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
அத்துடன் இன்று விசாரணைக்காக பட்டியடலிடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளும் 2026 செப்டம்பர் 30 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15