கால்பந்தாட்ட திறமையால் சர்வதேச அரங்கில் சாதனை படைத்த யாழ். சிறுவன்
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் - அபுதாபியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
குறித்த போட்டியில் கலந்து கொண்டு, கீழே பந்தை விழ விடாமல் ஆயிரம் தடவைகள் கட்டுப்படுத்தி முதலாவது இடத்தையும் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
குறித்த சிறுவன் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.
உதைபந்தாட்ட போட்டி
டுபாய் அபுதாபியில் கடந்த 15ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இதில் சர்வதேச ரீதியாக நாடுகளைச் சேர்ந்த 15 கழகங்கள் பங்குபற்றின. அதில் இலங்கையில் இருந்து குறித்த போட்டியில் பங்குபற்றிய கழகத்தில் யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் இடம்பிடித்திருந்தார்.
குறித்த போட்டியில் இவர் பிரதிநிதித்துவப் படுத்திய இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் இலண்டன் காற்பந்து வீரரான ரூபென் டியாஸ் தனது கையெழுத்திட்ட T-shirt ஒன்றினை பரிசாக வழங்கினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
