அரசியல் தலையீடுகள் காரணமாக கால்பந்தாட்ட பேரவைக்கு தடை விதிப்பு
இலங்கையில் பிரபலமான சர்வதேச விளையாட்டுக்களில் அரசியல் தலையீடுகள் காரணமாக கால்பந்தாட்டப் பேரவைக்கு தடை விதிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவ நிபுணர் டொக்டர் அமல் ஹர்ஸ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச ரீதியில் விளையாட்டு அணிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கும்போது அதனை தடுக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுக்கள் தொடர்பில் எவ்வித அறிவும் இல்லாதவர்கள் இலங்கை விளையாட்டு அணிகள் மீதான சர்வதேச நன்மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டுக்களில் அரசியல் தலையீடுகள்
கால்பந்தாட்டம், ரகர் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக பிரச்சினைகைளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விளையாட்டுத்துறைகளை சுயாதீனமாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக டொக்டர் அமல் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.