இலங்கை கால்பந்து சபைக்கு தடை! வெளியானது அறிவிப்பு
இலங்கை கால்பந்து சபைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகக்குழுவை “பிபா” ஏற்றுக் கொள்ளாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தடை உத்தரவு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹெவகேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையின்படி, இலங்கை மற்றும் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு வீரர் அல்லது அதிகாரி அல்லது பயிற்சியாளர் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எவற்றிலுமோ பங்குபற்ற முடியாது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
