சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்ட மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்
முத்தையன்கட்டு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை நடவடிக்கை இன்றையதினம் (25.07.2025) மேற்கொள்ளப்பட்டிருந்து.
உணவுப்பொருட்கள் அழிப்பு
இதன்போது முத்தையன்கட்டு வலதுகரை, முத்தையன்கட்டு இடதுகரை பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடவடிக்கை மேற்கொண்டவர்கள்
முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் லோஜிதன், ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 15 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
